Friday 15 May 2015

Sakkarai Nilavea சக்கரை நிலவே

Sakkarai Nilavea

சக்கரை நிலவே
Movie
Youth (2002)
Music
Mani Sharma
Lyrics
Vairamuthu 



சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
மனம் பச்சை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்ததுன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எறித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

சக்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய்

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா

No comments:

Post a Comment